Skip to content

வாலிபர் மாயம்…டூவீலரை திருடிய வாலிபர் கைது…. திருச்சி க்ரைம்…

  • by Authour
வாலிபர் மாயம்…  திருச்சி, எடமலைப்பட்டி புதூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது36). கடந்த 16 ந்தேதி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இவர் மறுநாள் 17ந் தேதி மாயமாகி விட்டார். இது குறித்து அவரது மனைவி தீபா அளித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிபுதுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டூவீலரை திருடிய வாலிபர் கைது. திருச்சி, அரியமங்கலம், உக்கடையை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் காதர் (வயது22). இவர் கடந்த மார்ச்.6 ந் தேதி தன் இருசக்கர வாகனத்தை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு துாங்க சென்றார், மறுநாள் எழுந்து பார்த்தபோதுஇருசக்கர வாகனம் திருட்டு போனது தெரிந்தது. இது குறித்து அப்துல் காதர் அளித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து மேல கல்கண்டார் கோட்டை, அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்த கார்த்திக் (வயது27) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. மரத்தில் காவலாளி தூக்கு மாட்டி தற்கொலை…  திருச்சி, மிளகுபாறை, ஆதி திராவிடர் தெருவைச் சேர்ந்தவர் ராஜா (வயது40). இவர் கே.கே.நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். குடிபழகத்திற்கு அடிமையானவர். கடந்த ஏப் 18ந் தேதி மதுகுடிக்க தன் மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் வேலைக்கு சென்ற ராஜா அங்கு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கேகேநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுடுகாடு அருகே வாலிபர் சடலம்.. திருச்சி திருவரங்கம் கொண்டயம்பேட்டை சாலை, மயானம் அருகே அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவரின் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி, திம்மராய சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் மணியரசன் மற்றும் திருவரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.அங்கு இறந்து கிடந்த வாலிபர் உடலை பார்த்து போலீசார் சோதனை செய்தனர். மேலும் அந்தபகுதியில் உள்ள பொதுமக்களிடம் இறந்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தினார்கள் விசாரணையில் அந்த வாலிபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியவில்லை. இதையடுத்து திருவரங்கம் போலீசார் அந்த வாலிபர் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து இறந்த வாலிபர்யார் எந்த ஊரை சேர்ந்தவர் எப்படி இறந்தார் என்பது குறித்து அவரை யாராவது அடித்து கொலை செய்தார்களா அல்லது அவரே தற்கொலை செய்து கொண்டாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காந்தி மார்க்கெட் அருகே புகையிலை விற்றவர் கைது திருச்சி, காந்தி மார்க்கெட் அருகே மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை நடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காந்தி மார்க்கெட் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது வரகனேரி, வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வினோத் (வயது27) என்பவரை போலீசார் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரது கடையில் இருந்து ரூ. 9 ஆயிரத்து 450 மதிப்புள்ள 3.252 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய மற்றோரு நபரை தேடி வருகின்றனர். புத்தூர் அருகே போதை மாத்திரை வைத்திருந்த வாலிபர் கைது திருச்சி,புத்தூர் வண்ணாரப்பேட்டை அருகே ஏப்.19ம் தேதி அரசு மருத்துவமனை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அங்கிருந்த வாலிபர்களை அழைத்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் புத்தூர் மேல வண்ணாரபேட்டையை சேர்ந்த ரிஷிகேஷ், உறையூர், காவல்கார தெருவை சேர்ந்த ஜாகிர் உசேன் மற்றும் கீழ வண்ணாரபேட்டையை சேர்ந்த ரெக்ஸ் டேனியல் என்பதும், அவர்கள் போதை மாத்திரை வைத்திருந்ததும் தெரிந்தது. போலீசார் ரிஷிகேசை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய மற்ற இருவரை தேடி வருகின்றனர். அவர்களிடமிருந்து 12 தாப்பென்டடால் போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது.
error: Content is protected !!