Skip to content

போதைப்பொருள் வழக்கு… ”குட் பேட் அக்லி” பட நடிகர் கைது….

  • by Authour
கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல மலையாள நடிகை வின்சி அலோசியல் படப்பிடிப்பு தளத்தில் முன்னணி நடிகர் ஒருவர் தன்னிடம் போதையில் அத்துமீறியதாகவும்,  ஆகையால் போதைப் பொருள் பயன்படுத்தும் நடிகருடன் நடிக்கமாட்டேன் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.   அதே நேரத்தில் நடிகை வின்சியிடம் அத்துமீறியது பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்ற தகவலும் வெளியானது. ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ள  இவர், சமீபத்தில் நடிகர் அஜித் நடித்து வெளி யாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித் துள்ளார். இந்தநிலையில் கேரளாவில் போதைப்பொருள் கடத்தலில் முக்கிய நபராக இருக்கும் சஜீரை போலீசார் தேடிவந்தனர். அவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோவுடன்  தங்கியிருக்கலாம் என்று கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றனர். அப்போது நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஓட்டலின் 3-வது மாடியில் இருந்து குதித்து  தப்பி ஓடி விட்டார். அவர் தப்பி ஓடும் வீடியோ காட்சிகள், ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவாகியிருந்தது. நடிகர் ஷைன் டாம் சாக்கோ எதற்காக தப்பி ஓடினார்? என்ற சந்தேகித்தனர். இந்நிலையில்  போதை பொருள் வழக்கில் மலையாள நடிகர் சாக்கோ கைது செய்யப்பட்டுள்ளார்.
error: Content is protected !!