Skip to content
Home » 15 நாட்களில் காவிரி பாலம் ரெடி ….

15 நாட்களில் காவிரி பாலம் ரெடி ….

  • by Senthil

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூரில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் இரண்டாம் கட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் ரூபாய் 1000 பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் …  புதுமைப்பெண் இரண்டாம் கட்டமாக திருச்சி மாவட்டத்தில் 1730 மாணவிகளை தேர்வு செய்து இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 820 மாணவிகளை வரவழைத்து இந்த திட்டம் செயல்முறை படுத்தப்பட்டுள்ளது. இன்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள் அனைவருக்கும் டெபிட் கார்டு வழங்கப்பட்டுள்ளது மேலும் கலந்து கொள்ளாத மாணவிகளுக்கு

அவர்களுடைய வீட்டு முகவரிக்கு டெபிட் காட் அனுப்பப்படும் என்றார்.

திருச்சி மாவட்டத்தில் ரேஷன் அரிசி பதுக்கள் மற்றும் கடத்தலை தடுப்பதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள் விரைவில் முழுமையாக தடுக்கப்படும். காவிரி பாலம் சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிந்து விட்டது. இன்னும் 15 நாட்களில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை மழையால் பாதிக்கப்பட்ட நிலமாக இன்றுவரை 81 ஏக்கர் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது இன்னும் 3 நாட்களில் பணிகள் முழுமையாக முடியும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!