Skip to content

மயிலாடுதுறை அறநிலையத்துறை அலுவலகம் முன், குத்தகை விவசாயிகள் போராட்டம்

  • by Authour

மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன் தமிழ்நாடு அடிமனைப் பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயில், மடம், அறக்கட்டளை, வக்ஃப் போர்டு, தேவாலாயம், இனாம் இடங்களில் குடியிருப்பவர்கள், சிறு வணிகம், சாகுபடி செய்பவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

சங்கத்தின் மாவட்ட தலைவர் ராயர் தலைமையில் நடைபெறும்  இந்த போராட்டத்தில் மாநில செயலாளர் சாமி.நடராஜன் உள்பட 500க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

பல தலைமுறைகளாக கோயில் இடங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அறநிலையத்துறை சட்டப்பிரிவு 34-ன்படி வறுமைக்கோட்டுக்குகீழ் உள்ளவர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு நியாயமான விலையை தீர்மானித்தும் கிரய பட்டா வழங்கிட வேண்டும்.

கிரய பட்டா கோரிக்கை நிறைவேறும் வரை பயனாளிகளுக்கு வாடகை சட்டப்பிரிவு 34ஏ அடிப்படையில் நிலத்தின் வாடகை மதிப்பில் நிர்ணயிப்பதற்கு பதிலாக, தவறுதலாக விற்பனை மதிப்பில் வாடகை நிர்ணயிப்பதை கைவிட்டு அரசாணை 298 அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். சாகுபடி செய்துவரும் விவசாயிகளின் குத்தகை உரிமையை பறித்து ‘மறு ஏலம்” என்ற பெயரில் ஏலம் விடும் நடவடிக்கையை கைவிட்டு பல தலைமுறைகளாக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஆர்.டி.ஆர் பதிவு செய்து கொடுக்க வேண்டும்  என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.

error: Content is protected !!