கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியை சுற்றி 50க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடி கிராமங்கள் உள்ளது. இவர்கள் வனப்பகுதியில் குடியிருந்து வருகின்றனர் வனப்பகுதியில் விளையும் பயிர் வகை தேன் மிளகு காப்பி ஏலக்காய் பூண்டு மஞ்சள் போன்ற பயிர்களை விவசாயம் செய்து அதை டவுன் பகுதியில் விற்று வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். ஏப்ரல் மே மாதங்களில் வனப்பகுதியில் அதிகமாக தேனீக்கள் கூடு கட்டி தேன் காணப்படும் இதை சேகரிக்க பழங்குடியின மக்கள் அவர்கள் தங்கி இருக்கும் பகுதியில் இருந்து அடர்ந்த வனப் பகுதிக்கு சென்று வனப்பகுதிக்குள் தற்காலிக செட் அமைத்து அங்கு குடியிருந்து வனப் பகுதிக்கு சென்று தேன் சேகரித்து தற்காலிக செட்டில் தங்கி இருந்து தேன் சேகரித்து வீட்டிற்கு வருவார்கள் இது இவர்களது வாடிக்கையாககும்
இந்நிலையில் நேற்று அடித்தல்தொட்டி என்ற இடத்தில் வனப்பகுதிக்குல் தொழில் சேகரிக்க சென்ற ஜெபாஸ்டின் வயது 30 என்பவரை காட்டு யானை தாக்கி கொன்றது.
அந்த சோகம் மறைவதற்குள்ளாக இன்று அதிரப்பள்ளி வனப்பகுதி அருகில் வாழஜால் என்ற வனப்பகுதியில் தேன் எடுப்பதற்காக ஒரு குடும்பத்தில் பெண் உட்பட நான்கு பேர்கள் சென்றுள்ளனர் இவர்கள் வாழச்சால் ஆற்றின் நடுவே தற்காலிக செட்ட அமைத்து தங்கி இருந்து தேன் எடுப்பதற்கு சென்று உள்ளனர் இன்று அதிகாலை யானைகள் கூட்டம் அப்பகுதிக்கு வந்து அந்த தற்காலிக சட்டை உடைத்து உள்ள இருந்த அம்பிகா 34 மற்றும் சதீஷ் 30 என்பவரை யானைகள் தாக்கிக் கொன்றது மற்ற இருவரும் அப்பகுதியில் இருந்து தப்பி ஓடினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் வந்து இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளனர் வனப்பகுதியில் தேன் எடுக்க சென்ற குடும்பத்தில் இருவரை காட்டு யானை தாக்கிக் கொன்ற சம்மதம் அப்பகுதியில் சோகத்தில் ஏற்படுத்தி உள்ளது.