வழக்கறிஞர்களின் நலனை தொடர்ச்சியாக புறக்கணிக்கும் மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட நீதிபதியை உடனடியாக இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை புறக்கணித்து மாயவரம் மற்றும் மயிலாடுதுறை வழக்குரைஞர்கள் சங்கத்தை சேர்ந்த வழக்குரைஞர்கள் 100க்கும் மேற்பட்டோர் நீதிமன்றம் வாசலில் ஆர்ப்பாட்டம். நீதிபதியை இடமாற்றம் செய்யும் வரை கூடுதல் நீதிமன்றத்தை புறக்கணிப்பது என வழக்கறிஞர்கள் முடிவெடுத்துள்ளனர். வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜெகன் ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை வடசென்னை சங்கத் தலைவர் வேலு குபேந்திரன், மூத்த வழக்கறிஞர் பாலு உட்ப ட மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை… நீதிபதியை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்…
- by Authour
