நெல்லை என்றதும் நினைவுக்கு வருவது அல்வா. அதிலும் குறிப்பாக இருட்டுக்கடை அல்வா என்பது பிரசித்தம். நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரே சிறிய கடையாக உள்ளது இந்த இருட்டுகடை. 1940களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் இதனை தொடங்கி உள்ளார். இப்போதும் அவருடைய மூன்றாம் தலைமுறை வாரிசுகள் தான் இதனை நடத்துகிறார்கள்.
இருட்டு கடை உரிமையாளர் கவிதாசிங்கின் மகள் கனிஷ்காவுக்கும் கோவையை சேர்ந்த பல்ராம்சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. இப்போது இருட்டு கடையை தனது பெயருக்கு எழுதிக்கேட்டு தகராறு செய்கிறாராம் பல்ராம் சிங். வரதட்சணையாக பணம், நகை, வாகனம், வீடு கேட்பார்கள்.
ஆனால் பல்ராம் சிங் ஒட்டுமொத்தமாக கடையையே ஆட்டயபோட பார்த்து உள்ளார். கடையை கொடுக்க உரிமையாளர் மறுத்து விட்டதால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு உள்ளது. இப்போது பல்ராம் சிங் கொலை மிரட்டல் விடும் அளவுக்கு பிரச்னை முற்றிவிட்டது. இது குறித்து கனிஷ்கா நெல்லை மாநகர போலீஸ் அலுவலகத்தில் வரதட்சணை கொடுமை புகார் கொடுத்து உள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.