மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து கமல் நிருபர்களிடம் கூறியதாவது:
மேல்சபை உறுப்பினர் பதவி தொடர்பாக முதல்வரை சந்திக்கவில்லை. தேர்தல் வரும்போது எம்.பி பதவியில் யார் போட்டியிடுவார்கள் என்பது தெரியவரும். கவர்னர் விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் கிடைத்த வெற்றி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த கொண்டாட்டத்தில் பங்கேற்கவும், அந்த கொண்டாட்டத்திற்கு காரணமாக இருந்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கவும் வந்தேன். இதுபோல வக்பு வாரிய சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததற்கும், தீர்மானம் நிறைவேற்றியதற்கும் நன்றி தெரிவித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.