Skip to content
Home » கரூரில் விளையாட்டு போட்டி…. கலெக்டர் துவக்கி வைத்தார்….

கரூரில் விளையாட்டு போட்டி…. கலெக்டர் துவக்கி வைத்தார்….

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 202-23 என்ற பெயரில் மாநிலம் முழுவதும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடந்த ஆணையிடப்பட்டுள்ளது. மண்டல அளவிலான போட்டிகளை நடத்திட ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி. கல்லூரி மாணவ/மாணவியர்கள். பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளர்கள் ஆகிய ஐந்து பிரிவுகளில் ஆண் பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் பள்ளி மாணவ/மாணவியர்களுக்கு 11 வகையான விளையாட்டு போட்டிகளும், கல்லூரி மாணவ/மாணவியர்களுக்கு 11 வகையான விளையாட்டு போட்டிகளும், அரசு ஊழியர்களுக்கு 5 வகையான விளையாட்டு போட்டிகளும், பொதுபிரிவினருக்கு 5

வகையான விளையாட்டு போட்டிகளும்; மாற்றுதிறனாளர்களுக்கு 8 வகையான விளையாட்டு போட்டிகளும் என மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

தமிழகம் முழுவதும் விளையாட்டுகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் தனி நபர் மற்றும் குழு விளையாட்டு வீரர்/வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகை மட்டும் ரூ 15,99, 04,000 (பதினைந்து கோடியே தொன்னுற்றி ஒன்பது லட்சத்து நான்காயிரம் மட்டும்) வழங்கப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில் 08.02.2023 இன்று முதல் முதலமைச்சர் கோப்பைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் துவங்கப்பட உள்ளன.

கரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் பங்கு பெறுவதற்கு இணையதளம் வாயிலாக தனிநபர் விளையாட்டு பிரிவில் மொத்தம் 6451 நபர்களும், குழு விளையாட்டுப்போட்டிகளில் 10000 நபர்களும் மொத்தம் 16451 விளையாட்டு விரர்/வீராங்கனைகள் பதிவு செய்துள்ளார்கள். கரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டுப் போட்டியை இன்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் விளையாட்டு துறை அதிகாரிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!