தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் முடிந்தன. ஈரோடு அடுத்த சித்தோட்டைச் சேர்ந்த ஒரு சிறுமி, பவானியை சேர்ந்த 4 மாணவிகள் தேர்வு முடிந்த பின்னர் வீடு திரும்பவில்லை.
மாணவிகளின் பெற்றோர் இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தனர்.
இந் நிலையில், மாணவிகள் எங்கு உள்ளனர் என்பதை கண்டறியும் பணியில் போலீசார் இறங்கினர். மாயமான மாணவிகளில் ஒருவர் செல்போன் வைத்திருந்தது தெரியவந்தது. நல்லவேளையாக அவரும் செல்போனை ஆன் செய்து வைத்திருந்தார். எவே அந்த சிக்னல் மூலம் அந்த மாணவி எங்கே இருக்கிறார் என தேடியபோது திருச்சி மாவட்டத்தை காட்டியது. அதன் பேரில் ஈரோடு போலீசார் திருச்சி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். திருச்சி போலீசாரும் அந்த எண்ணை பாலோ செய்து அவர்கள் சமயபுரத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர். நேற்று சமயபுரம் தேர்த்திருவிழா என்பதால் கோவிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அங்கு இருந்த மாணவிகளை போலீசார் பிடித்தனர். அதற்குள் ஈரோடு போலீசாரும் இங்கு வந்தனர். அவர்களிடம் 5 பேரையும் திருச்சி போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் 5 பேரும் பவானி போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்ட்டனர். அங்கு 5 பேரின் பெற்றோரும் வந்திருந்தனர். அவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.