பள்ளப்பட்டியில் 265- ஆம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் திருவிழாவை முன்னிட்டு முதல் நாள் சந்தனக்கூடு ஊர்வலம் விமர்சையாக நடைபெற்றது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் 265-ம் ஆண்டு சந்தனக்கூடு உருஸ் விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தர்கா வளாகத்தில் இருந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் அதிகாலை
3 மணி அளவில் தொடங்கி பள்ளப்பட்டியின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.
பின்னர் மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் தர்காவில் உள்ள அவரது நினைவிடத்தில் திரளான பொதுமக்கள் பிரார்த்தனை செய்தனர். குறிப்பாக பல ஆண்டுகள் தொன்று தொட்டு சந்தனக்கூடு ஊர்வலத்தை மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி அனைவரும் சேர்ந்து இழுத்து செல்கின்றனர்