முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6.30 மணிக்கு, தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடப்பது முக்கியத்துவம் பெறுகிறது. நாளை காலையில் சட்டசபையில் சுற்றுலா – கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது விவாதம், அமைச்சர்கள் பதிலுரை, வாக்கெடுப்பு ஆகியவை நடக்க உள்ளன. சட்டமன்ற அலுவல்கள் நாளை பிற்பகலில் நிறைவடைந்துவிடும். அதைத்தொடர்ந்து அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
புதிய தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. தமிழகத்திற்கு வரும் முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.