தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள், துணை மேலாளர்கள் நேற்று அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். விழுப்புரம் மண்டலத்தில் பணியாற்றி வந்த பொது மேலாளர் சதீஸ்குமார் அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) திருச்சி மண்டல பொது மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மண்டல பொது மேலாளர் முத்துகிருஷ்ணன் மதுரை மண்டலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதுபோல தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வரும் 23 பொது மேலாளர்கள், துணை மேலாளர்கள் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பனீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார்.