வால்பாறை சாலக்குடி இடையே உள்ளது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. அப்பகுதியில் உள்ள வஞ்சிக்கோடு பழங்குடி கிராமத்தில் சில குடும்பத்தினர் வசிக்கின்றனர். காட்டு விளை பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வாழ்ந்து வருகின்றனர். நேற்று வீட்டிற்கு திரும்பாத நிலையில் 2 பேரையும் உறவினர்கள் வனப்பகுதிக்குள் தேடி உள்ளனர். 2 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். எதிர்பாரதவிதமாக காட்டு யானையிடம் சிக்கி உயிர் இழந்து உள்ளனர். யானைகள் விரட்டி தாக்கியதில் சதீஷன் மற்றும் அம்பிகா ஆகிய 2 பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
உடல்களும் மீட்கப்பட்டு சாலக்குடியில் உள்ள கேரள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வனத்துறையினர் மற்றும் உறவினர்கள் கவலை அடைந்து உள்ளனர். நேற்று முன்தினம் அதிரப்பள்ளி பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.