தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைஇந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் ஏ.முஹம்மது சித்திக், துணைத் தலைவர் ஐ.முஹம்மது முனீர், பொதுச் செயலாளர் ஏ.முஹம்மது ஷிப்லி , துணைப் பொதுச்செயலாளர் தக்வா எம்.மொய்தீன், பொருளாளர் ஏ.ஐ.பிர்தவ்ஸ் ஆகியோர் இன்று தமிழக முதல்வரை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்தனர்.
சிறுபான்மை முஸ்லிம்களின் நலன்களுக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு சட்டத்திருத்தை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றியதற்கும்,இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக அனைத்து வகையிலும் தொடர்ந்து போராடி வருவதற்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.அதோடு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் கோரிக்கை மனுவை முதல்வரிடம் அளித்தன