Skip to content

திருச்சியில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

வழித்தட வசூல் குறைவுக்கு மெமோ கொடுத்து ஆண்டு ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பது, பேருந்து வழித்தட பழுதுக்கு சொந்த பணத்தை செலவு செய்ய சொல்வது, டிஜிட்டல் பண பரிவர்த்தனை கோளாறுக்கு தொழிலாளர் சொந்த பணத்தை கட்ட உத்தரவிடுவது, சீனியாரிட்டி அடிப்படையில் போஸ்டிங் போட மறுப்பது, மருத்துவ காரணங்களால் உடல் நலம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாற்று பணி வழங்க மறுப்பது, சின்ன சின்ன காரணங்களுக்காக சஸ்பென்சன் செய்வது பணியிட மாற்றம் செய்வது போன்ற எஸ்சிடிசி நிர்வாக இயக்குனரின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து சிஐடியூ அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க திருச்சி பணிமனை சார்பில் இன்று டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள பணிமனை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில தலைவர் அருள்தாஸ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் துவக்கி வைத்தார். சங்க திருச்சி, கரூர் மண்டல பொதுச்செயலாளர் மாணிக்கம், ஓய்வு பெற்றோர் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் சண்முகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முனைவர் பால்பாண்டி வாழ்த்துரை வழங்கினார். சங்க மாநில பொதுச்செயலாளர் கனகராஜ் நிறைவுரை ஆற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!