தமிழ்நாட்டில் கடந்த மாதம் (மார்ச்) 28-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு தொடங்கியது. இந்தத் தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித் தேர்வர்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம்9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினார்கள்.
12 ஆயிரத்து 480 பள்ளிகளை சேர்ந்த மாணவ – மாணவிகள் 4,113 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வை எழுதினார்கள். இன்று கடைசி தேர்வான சமூக அறிவியல் தேர்வு நடந்தது. இன்று தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். வரும் மே 19ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகிறது.