தமிழ்நாட்டில் பா.ஜ.க – அதிமுக கூட்டணி உருவாகியுள்ள நிலையில் மோடியை புகழ்ந்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “பிரதமர் மோடிக்கும், விஜயகாந்த்க்கும் இடையில் இருந்த உறவு, அரசியலை தாண்டியது. கேப்டனை தமிழ்நாட்டின் சிங்கம் என்று பிரதமர் அழைப்பார். இருவரது நட்பு, பரஸ்பர மரியாதையிலும், அன்பிலும் கட்டப்பட்ட மிகவும் அரிதான ஒன்று. பிரதமர் மோடியை என் வாழ்நாளில் என்றும் மறக்கமாட்டேன். விஜயகாந்த் உடல்நலம் குறித்து சகோதரரை போன்று பிரதமர் மோடி விசாரிப்பார். உங்கள் மூத்த சகோதரராக நினைத்து என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என பிரதமர் மோடி கூறினார்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “என் அன்பு நண்பர் கேப்டன் விஜயகாந்த் தனித்துவமானவர், அவரும் நானும் பல ஆண்டுகளாக மிகவும் நெருக்கமாகப் பழகி, ஒன்றாக வேலை செய்தோம். விஜயகாந்த் சமூகத்திற்குச் செய்த நன்மைக்காக தலைமுறை, தலைமுறையாக மக்கள் அவரை நினைவில் கொள்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.