கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர், தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சரண்யா. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து 4 ஆண்டுகள் ஆகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர்களது மகன் சிவபாலன் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதால், இருவர் மட்டும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 11.45 மணியளவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சந்திரசேகருக்கும், அவரது மனைவி சரண்யாவுக்கும் வாக்குவாதம் மூலம் பிரச்சினை ஏற்பட்டதால், சரண்யா மூங்கில் கட்டையால் சந்திரசேகர் தலையின் பின் பகுதியில் அடித்ததாக கூறப்படுகிறது.
குடிபோதையில் கணவன், மனைவி இடையே நடந்த பிரச்சனை காரணமாக மனைவி, கணவனை தலையில் கட்டையால் அடித்ததில் காயம் ஏற்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்து மருத்துவர் பரிசோதனை செய்தபோது சந்திரசேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து உயிரிழந்த சந்திரசேகர் உடலை மீட்டு, மருத்துவமனை சவக்கிடங்கில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு கணவனை கட்டையால் அடித்து கொலை செய்த சரண்யாவை தாந்தோணிமலை காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.