தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 19 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமப்பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி தன் வீட்டின் அருகே சாலையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது காட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவரின் மகன் விஷ்வா (எ) விஸ்வநாதன் (19) அங்கு வந்தார். பின்னர் அந்த சிறுமியை விஸ்வநாதன் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் பயந்து போன அந்த சிறுமி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் திருவிடைமருதூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் விஸ்வநாதன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானது. இதையடுத்து திருவிடைமருதூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துர்கா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் விஸ்வநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.