Skip to content
Home » சுடுகாடு இல்லை…. இறந்தவர் உடலை 2 கிமீ தூக்கி செல்லும் அவலம்….

சுடுகாடு இல்லை…. இறந்தவர் உடலை 2 கிமீ தூக்கி செல்லும் அவலம்….

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள முத்தரசபுரத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த விஜயகுமார் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார் அவரை அடக்கம் செய்வதற்கு சாலை இல்லாமல் சுமார் 2 கிலோமீட்டர் தூரம்   சேரும் சகதியுமான நெல் வயல்களின் வழியாக விவசாயிகள் அரும்பாடுபட்டு வளர்த்த நெற் பயிர்களின் நடுவில் தூக்கி சென்றனர். மேலும் பல ஆண்டுகளாக இந்த துயரத்தை சந்தித்து வருவதாக வேதனையுடன் கூறும் அப்பகுதி மக்கள் கிராமத்தில் யாராவது உயிரிழந்தால் ஒவ்வொரு முறையும் வயலில் தூக்கி சென்று பாடுபட்டு வளர்த்த நெற்பயிர்கள் நாசமாவதாக

 

வேதனையோடு கூறியுள்ளனர். மேலும், மழைகாலங்களில் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை தூக்கி செல்லும் நிலை ஏற்படுவதாகவும் மேலும் நிரந்தர சுடுகாடு கட்டிடம் கூட இல்லாமலும் கீற்று கொட்டகைகள் அவ்வப்போது அமைத்து சடலங்களை எரி ஊட்டுவதாகவும் பல நேரங்களில் மழையினால் நனைந்து சடலங்கள் பாதியிலேயே எரிந்து நின்று விடுவதால் நரி,நாய் உள்ளிட்டவை இழுத்துச் சென்றுள்ளார் வருவதாகவும் மறுபடியும் மறு சடங்குகள் செய்யும் துர்பாக்கிய நிலை உள்ளதாகவும் வேதனை தெரிவிக்கும் கிராம மக்கள் பல ஆண்டுகளாக புகார் மனு கொடுத்தும் நாகை மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய பொதுமக்கள், விரைவில் சுடுகாட்டிற்கு சாலை அமைத்து தரவேண்டும் என்றும் தமிழக அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்தரபுரம் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!