Skip to content

கூலிப்பிரிப்பதில் தகராறு… திருச்சி காந்தி மார்கெட் தொழிலாளி கொலை…

  • by Authour

திருச்சி வரகனேரி கல்பாளையம் பகுதியை சேர்ந்த மகாலிங்கத்தின் மகன் ரெட்டைமலை(வயது 34). இவருடைய அண்ணன் கிருஷ்ணனின் மகன் மதன்குமார்(25). இவர்கள் இருவரும் காந்திமார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில் சுமை இறக்கியதில் வந்த கமிஷன் தொகையை பகிர்ந்து கொள்வதில் இருவருக்கும் இடையே கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை இருந்துவந்தது. இந்தநிலையில் கடந்த 6-ந்தேதி மதியம் 3 மணி அளவில் வீட்டில் இருந்த இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
அப்போது ரெட்டமலை மதன்குமாரை கல்லால் தா தாக்க முயன்றதாக கூறப்படுகிறது இதில் ஆத்திரமடைந்த மதன்குமார் சித்தப்பா ரெட்டைமலையை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், வீட்டில் இருந்த அரிவாளால் வெட்டினார். இதில் அவரது இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே ரெட்டைமலையை உறவினர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அன்று மதியம் 3.45 மணி அளவில் ஆஸ்பத்திரியில் இருந்து அவர் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் ரெட்டைமலை எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெறவில்லை. ஆனால் தொடர்ந்து மதுகுடித்துவந்துள்ளார். இதனால் அவருடைய காயத்தில் தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உறவினர்கள் அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ரெட்டைமலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி காயத்ரி கொடுத்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார், அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்துமத மதன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!