திருச்சி, தெற்கு காட்டூர் அண்ணா தெருவை சேர்ந்தவர் கோ. அருண்குமார் (43) இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் பார்த்து வந்தார். அவருக்கு லதா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியிருந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் அருண்குமாரின் அத்தை மகளான ஐஸ்வர்யா (29) கணவனை இழந்து இரு குழந்தைகளுடன் இருந்து வந்துள்ளார். ஐஸ்வர்யாவை அருண்குமார் 2 ஆவது திருமணம் செய்தார். அருண்குமாருக்கு இருந்த மதுப்பழக்கம் காரணமாக அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இருதினங்களுக்கு முன் ஐஸ்வர்யா தாய்வீடு சென்றுவிட்டார். இதில்மனமுடைந்த அருண்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவெறும்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்..
குடும்ப தகராறு…. திருச்சி காந்தி மார்கெட் வியாபாரி தற்கொலை…
- by Authour
