அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் ஏப்ரல் 14ம் தேதி சமத்துவ நாளாக கொண்டாடபடுவதையொட்டி அன்றைய தினம் விடுமுறை என்பதால் இன்று 11/04/2025 சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள், அனைத்து அரசு அலுவலகங்களில் நடந்தது.
திருச்சிராப்பள்ளி அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்திலும் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பொது மேலாளர் ஆ .முத்துகிருஷ்ணன் தலைமையில் அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இவ் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் துணை மேலாளர் ராமநாதன் (பணியாளர் மற்றும் சட்டம் ),மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.