திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. இதனை வரும் மே 9ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக பஸ் நிலைய பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று பஸ்நிலைய பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வில் மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், நகர பொறியாளர் சிவபாதம் , மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்