நாகப்பட்டினம் உள்ள பிரசித்தி பெற்ற குமரன் கோவில் தைப்பூசத் திருவிழா கடந்த 25 ம், தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நாள்தோரும் முருகப்பெருமான் ரிஷப வாகனம், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். தைப்பூச திருவிழாவின் நிறைவு நாளான நேற்று புஷ்ப பல்லக்கு சுவாமி
வீதியுலா காட்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் முருகப்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது. பின்னர் முருகப்பெருமான் புஷ்பலக்கில் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.