திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அடுத்து பனமங்கலம் தெய்வா சிட்டியை சேர்ந்த அமுதன் மனைவி ஸ்ரீதேவி (42). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் அமுதன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவாதால் ஸ்ரீதேவி தனது தாய், மகளுடன் வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் பனமங்கலம் சீதாராமன் கார்டனை சேர்ந்த ஆறுமுகம் மனைவி உமாமகேஸ்வரி (40), அவரது உறவினர் பாலசுப்பிரமணியன் மனைவி சரோஜா (60) இருவரும் கடந்த 7 வருடமாக சம்பளத்திற்கு வீட்டு வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று ஸ்ரீதேவி வேலை நிமித்தமாக வெளியூருக்கு சென்றுவிட்டார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க மோதிரம், செயின், நெக்லஸ் உள்ளிட்ட 16 பவுன் தங்க நகைகள், ஒரு லட்சம் ரூபாய் பணம் மாயமாகியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத்தொடர்ந்து வீட்டின் உள்ளே வைத்திருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்டபோது வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்த உமாமகேஸ்வரி சரோஜாவின் துணையுடன் திருடியது பதிவாகியிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீதேவி கொள்ளிடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேவியர் மற்றும் போலீசார் உமாமகேஸ்வரி சரோஜா இருவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உமாமகேஸ்வரி, சரோஜா இருவரும் ஸ்ரீதேவி வீட்டில் நகை பணத்தை திருடியது உறுதியானது. இதனைத்தொடர்ந்து இருவரிடம் இருந்து 3 பவுன் நகை மற்றும் 12 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.
திருச்சியில் வேலை பார்த்த வீட்டில்.. 16 பவுன் நகை- 1 லட்சம் பணம் திருடிய 2 பெண்கள் கைது…
- by Authour
