கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் 265-ம் ஆண்டு சந்தனக்கூடு உருஸ் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பள்ளப்பட்டி மேற்கு தெரு பகுதியில் தோரணங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட புனித
கொடி அனைவரும் தோளில் சுமந்து வந்து கிரேன் உதவியுடன் புனிதக் கொடி ஏற்றப்பட்டது.
இதில் அரவக்குறிச்சி, சின்ன தாராபுரம், வேடசந்தூர், மார்க்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இன்று தொடங்கிய சந்தனக்கூடு உரூஸ் திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள், சந்தனக்கூடு ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.