கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு இருந்து வந்தது.குறிப்பாக இன்று குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வதியம், தண்ணீர் பள்ளி, ராஜேந்திரம், திமாச்சிபுரம், லாலாபேட்டை, அய்யர்மலை, கிருஷ்ணராயபுரம் மாயனூர் அதன் பகுதிகளில் கடும் குளிர் பனிமூட்டம் காணப்பட்டது.
ஊட்டி கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் காணப்படுவது கடும் பனி இருந்ததால் இது ஊட்டியா? அல்லது கொடைக்கானல் என்று நினைக்கத் தோன்றியுள்ளது. மேலும் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும்
பனி மூட்டத்தினால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் இருப்பதால் கார் மற்றும் கனரக வாகனங்களில் செல்வோர் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி மெதுவாக ஊர்ந்து செல்கின்றனர்.
மேலும் பணிக்கு இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் கடும் பனியால் குளிரில் நடுங்கியபடியே இரு சக்கர வாகனத்தை ஓட்டி செல்கின்றனர். மேலும் கடும் பனி மூட்டத்தினால் வேலைக்கு செல்பவர்கள் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கடும் குளிரில் நடுங்கியபடியே சென்றனர். குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனி பொழிவு இருந்த போதிலும் குறிப்பாக இன்று மிக அதிகளவில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது.