திருச்சியில் நடிகர் அஜித் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து, பட்டாசு வெடித்து, மேளம் அடித்து நடனம் ஆடி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்..
நடிகர் அஜித் படம் என்றாலே அவரது ரசிகர்களுக்கு எப்போதுமே திருவிழா போன்று கொண்டாடுவார்கள். அந்த வகையில் அஜித் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தப் படம் அஜித் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்..
அதிலும் குறிப்பாக ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது.
அர்ஜூன்தாஸ், பிரபு, த்ரிஷா, சுனில், யோகிபாபு, ரெடின்கிங்ஸ்லி, பிரசன்னா, பிரியா, பிரகாஷ்வாரியர், சிம்ரன் என யாரும் எதிர்பார்க்காத
வகையில் பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஆகையால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.
தமிழ்நாட்டில் “குட் பேட் அக்லி’ படத்தின் முதல் காட்சிகள் காலை 9 மணி முதல் தொடங்கியது.
இந்த நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இருக்கும் சோனா மீனா திரையரங்கில் அஜித் ரசிகர்கள் மேல தாளங்கள் முழங்க நடனம் ஆடி உற்சாகமாக கொண்டாடினர்.
மேலும் நடிகர் அஜித் அவர்களுக்கு வைக்கப்பட்ட 25 அடி பேனருக்கு பால் அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து நடனமாடி கொண்டாடினர்..
குறிப்பாக “அஜித்தே கடவுளே கடவுளே அஜித்” என்ற கோஷங்களுடன் நடனம் ஆடி “குட் பேட் அக்லி” திரைப்படத்தை அஜித் ரசிகர்கள் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து திரையரங்கிற்கு உள்ளே செல்லும் நபர்களை முழுமையாக சோதனை செய்த பிறகு அனுமதிக்கப்படுகிறார்கள். மது போதையில் இருந்தால் திரையரங்கிற்கு உள்ளே செல்ல அனுமதி கிடையாது என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“குட் பேட் அக்லி” திரைப்படம் பார்க்க வந்த பெண் ரசிகர் ஒருவர் கூறுகையில்…
நடிகர் அஜித்திடம் நிறைய எதிர்பார்க்கிறோம். பெரிய அளவில் அவர் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார், இந்த படம் நன்றாக இருக்கும் என தெரிவித்தார். திருச்சியில் “Good Bad Ugly ” திரைப்படம் வெளியீடு அஜித் கட் அவுட்க்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்