தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம், ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வல்லத்திராக்கோட்டை ராமசாமி தெய்வானையம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளி, வெண்ணாவல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, மாஞ்சான்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளி, கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கொத்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் 120 மாணவ, மாணவிகளுக்கு நீட், ஜே.இ.இ வழிகாட்டல் வகுப்புகள் இன்று தொடங்கியது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ரெத்தினக்குமார் தலைமை தாங்கி நீட், ஜே.இ.இ வழிகாட்டல் வகுப்புகளை தொடங்கி வைத்து பேசினார். இந்நிகழ்ச்சியில் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்( மேல்நிலை) முருகையன், அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் குமார், கெளசல்யா, பவுல்ராஜ், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்( இடைநிலை) வெள்ளைச்சாமி, பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி ஆகியோர் நீட் தேர்வில் வெற்றிபெற செய்யவேண்டிய வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறியதுடன் தேர்வில் அனைவரும் வெற்றி பெற வாழ்த்தினர்.