திருச்சி லால்குடியில் நண்பர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. தகராறின் போது நண்பர்களை நோக்கி நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட பாண்டியன். துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சந்தோஷ்குமார் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். அவரை மீட்டு உடனடியாக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.