Skip to content

அமைச்சர் நேருவின் தம்பியை விசாரணைக்கு அழைத்து சென்ற ED

  • by Authour

அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று  காலை திருச்சி, சென்னை, கோவை உள்பட  தமிழ்நாடு முழுவதும் 20 இடங்களில்  அமைச்சர் கே. என். நேரு வீடு மற்றும் நேருவின் சகோதரர்கள், மகன் ஆகியோரது வீடுகள், நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அமைச்சர் நேருவின் தம்பி கே. என். ரவிச்சந்திரன்,  TVH கட்டுமான நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். இவரது நிறுவனம் மற்றும் வீடுகளில் நேற்று அமலாக்கத்துறை சோதனையை தொடங்கியது. இன்று 2ம் நாளாக தொடர்ந்து சோதனை  நடக்கிறது. இந்த நிலையில் இன்று  பிற்பகல் 3.30 மணி   அளவில், சென்னை ஆர்ஏ புரத்தில் உள்ள இல்லத்தில் இருந்து ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள்,  காரில் அழைத்து சென்றனர்.‘

அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள  அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்து   சென்றுள்ளனர். 2013ல் வாங்கிய கடன் தொடர்பான வழக்கில் விசாரணை நடத்த அவரை அழைத்து சென்றுள்ளனர் என கூறப்படுகிறது.

error: Content is protected !!