தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. மசோதாக்களை கிடப்பில் போட்டதாக ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும். பதவி பிரமாணத்தின்படி கவனர் செயல்பட வேண்டும். கவர்னர் மாநில அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டும். முட்டுக்கடை விதிப்பவராக கவர்னர் இருக்கக்கூடாது. 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த தமிழ்நாடு ஆளுநரின் முடிவை ரத்து செய்து உச்சநீதிதிமன்ற சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் ஒரு மாதம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது.