அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே இறவாங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மனைவி சங்கீதா (வயது 42). இவருடைய கணவர் இறந்து விட மகள்கள் இருவரும் சென்னையில் படித்து வருகின்றனர். இந்நிலையில் தனியாக வசித்து வந்த சங்கீதாவிற்கு துணையாக எதிர் வீட்டில் உள்ள வயதான பாட்டி சாந்தா ( வயது 70) இரவு நேரங்களில் சங்கீதாவுக்கு துணையாக படுத்து கொள்வார். இந்நிலையில் கடந்த மாதத்தில் இரவு சுமார் 2 மணியளவில் வீட்டின் இரும்பு கேட் சத்தம் கேட்டு வெளியே சென்று சாந்தா பார்த்த போது, யாரோ மர்ம நபர் ஓடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதா, சாந்தா ஆகியோர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, வீட்டின் பின் கதவு மற்றும் பீரோ திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்து இருந்த 28 கிராம் தங்க நகை மற்றும் 5 ஆயிரம் ரொக்கம் காணாமல் அதிர்ச்சி அடைந்தனர்.இதே போல் வேம்புகுடியை சேர்ந்த துரை மனைவி அமுதா தனது மகளுடன் தூங்கி கொண்டு இருந்த போது பீரோவில் வைத்து இருந்த அரை பவுன் தோடு காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து சங்கீதா மற்றும் அமுதா கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீசார் வீடியோவில் நிர்வாணமாக நபர் வீட்டிற்குள் நுழைவது வீடியோவில் பதிவாகி இருந்தது வீடியோவில் பதிவான நபரின் அடையாளத்தைக் கொண்டு போலீசார் நிர்வாண நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு சுற்றி திரிந்த நபரை சந்தேகத்தின் பேரில் போலிசார் பிடித்து விசாரணை நடத்தியதில், கடலூர் மாவட்டம் பழஞ்சநல்லூர், காலனி தெருவை சேர்ந்த ஜோதி என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் நிர்வாணமாக வீட்டிற்குள் நுழையும் ஜோதி, வீட்டில் இருக்கும் நகை மற்றும் பணத்தை திருடிக் கொண்டு, தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்துவிட்டு தப்பி ஓடியது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் விசாரணையில் சங்கீதா மற்றும் அமுதா ஆகியோர் வீடுகளிலும் நகை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து ஜோதியை கைது செய்த போலீசார் பல்வேறு இடங்களில் நடைபெற்ற திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.