தஞ்சாவூர், ஏப்.6- தஞ்சாவூர் பெசண்ட் அரங்கில் கந்தர்வகோட்டையை சேர்ந்த கவிஞர் வீரமதி எழுதிய இளந்தளிர்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் கவிஞர் காமாட்சி சுந்தரம் (52). இவர் வீரமதி என்ற புனைப் பெயரில் இளம் தளிர்கள் என்ற தலைப்பில் விவசாயம், மொழிப்பற்று, மகளிருக்கான மரியாதை, கம்யூனிசம், இயற்கை போன்ற பொருள்களில் எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா தஞ்சாவூர் பெசண்ட் அரங்கில் நடந்தது.
நூல் வெளியீட்டு விழாவில் கவியரசு கண்ணதாசன் தமிழ் சங்க நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் கவிஞர் காவிரி மைந்தன் வரவேற்றார். இந்திய ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் நிதி ஆலோசகர் வைத்திலிங்கம் தலைமை வகித்து பேசினார். திரைப்பட இயக்குனரும் மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினருமான இ வி கணேஷ் பாபு கவிதை நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
வருமான வரித்துறை ஆணையர் ஓய்வு வனிதா வைத்தியலிங்கம், சென்னை விப்ரோ டெக்னாலஜிஸ் குமார் ராஜசேகர் ஆகியோர் கவிதை நூலை பெற்றுக் கொண்டனர். நூலாசிரியர் கவிஞர் வீரமதி ஏற்பரையாற்றினார். கல்லாக்கோட்டை ஓவிய ஆசிரியர் மாணிக்கவாசகம் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியை கந்தர்வக்கோட்டை கவிஞர் பாக்யா தொகுத்து வழங்கினார். தஞ்சை கரந்தை தமிழ் சங்கத் தலைவர் முனைவர் தெய்வநாயகம், பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பட விளக்கம்:
கந்தர்வகோட்டை கவிஞர் வீரமணி எழுதிய இளந்தளிர்கள் நூலை திரைப்பட இயக்குனர் கணேஷ் பாபு வெளியிட முன்னாள் வருமான வரித்துறை ஆணையர் ஓய்வு வனிதா வைத்திலிங்கம் பெற்றுக்கொண்டார். அருகில் முன்னாள் நிதி ஆலோசகர் வைத்தியலிங்கம், கவிஞர் வீரமதி என்கிற காமாட்சி சுந்தரம் மற்றும் பலர்.