Skip to content

விவாகரத்து வழக்கு- ஜி.வி.பிரகாஷ், சைந்தவிக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

பரஸ்பரம் விவாகரத்து கேட்ட வழக்கில்   இசையப்பாளர் ஜி.வி.பிரகாஷ் – பாடகி சைந்தவி இருவரும் செப்டம்பர் 25 தேதி நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் உள்ள  ஜி.வி பிராகஷ் குமார், கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும்,  சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜி.வி.பிரகாஷ் – சைந்தவிக்கு தம்பதிக்கு அன்வி என்ற மகள் உள்ள நிலையில், கடந்த 12 வருட திருமண பந்தத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் தங்களது  பிரச்சனையால் ஏற்கனவே சில காலம் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் இருவரும் பிரிவதாக gv prakash

அறிவித்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி கடந்த மாதம் 24 தேதி நேரில் ஆஜராகி மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை கோப்புக்கு எடுத்த சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, பரஸ்பரம் இருவரும் விவாகரத்து கோரிய மனுவை செப்டம்பர் 25 தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய விசாரணைக்கு இருவரும் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

error: Content is protected !!