நாகை மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 – வது வார்டு வெள்ளத்திடலில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் ஒன்று இருந்தது. இந்த சமுதாயக்கூடம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடிக்கப்பட்டது. தற்போது அதே இடத்தில் புதிய சமுதாயக்கூடம் கட்டும் பணியை இன்று தொடங்கினர். அப்போது சமுதாயக்கூடம் பராமரிப்பு பணிக்காக பேரூராட்சி இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதி 2021-22 கீழ் ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டதாகவும்,ஆனால் சமுதாயக்கூடத்தில் பராமரிப்பு பணி செய்யாமல் முழுவதும் இடிக்கப்பட்டதாகவும்,மேலும் ஏற்கனவே இருந்த அளவைவிட குறைவான அளவில் சமுதாயக் கூடம்
கட்டப்படுவதாகவும், சமுதாயக்கூடத்தை அனுமதி இன்றி இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அப்பகுதி கிராம மக்கள் சமுதாய கூடம் கட்டும் பணிக்கு குழி தோண்டிய போது ஒன்றாக இணைந்து பணியை தடுத்து நிறுத்தினார். மேலும் பொக்லைன் இயந்திரத்தையும் சிறை பிடித்தனர்.இதனால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்ட பின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.