ரூ.10 கோடியில் 500 ஆவின் பாலகங்கள் புதிதாக திறக்கப்படும் என பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். பாலின் தரத்தை ஆய்வு செய்ய ரூ.9.34 கோடியில் பால் பகுப்பாய்வு நவீன கருவிகள் வாங்கப்படும். 12,000 பால் உற்பத்தியாளர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படும். சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு விருது வழங்கப்படும்.கடந்த ஆட்சியை விட திமுக ஆட்சியில் பால் உற்பத்தி 13 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது என அமைச்சர் ராஜகண்ணப்பன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். ஆவினை மேம்படுத்த 18 திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 18 திட்டங்களும் முடிக்கப்பட்ட உடன் ஆவினை பிடிக்க முடியாது, சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
ரூ.10 கோடியில் 500 ஆவின் பாலகங்கள் புதிதாக திறக்கப்படும்… அமைச்சர் ராஜகண்ணப்பன்…
- by Authour
