Skip to content
Home » திருச்சியில் 13ம் தேதி அப்ரண்டீஸ் பயிற்சிக்கு ஆண் பெண் தேர்வு

திருச்சியில் 13ம் தேதி அப்ரண்டீஸ் பயிற்சிக்கு ஆண் பெண் தேர்வு

திறன் மேம்பாடு, தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சார்பில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களில் தொழில் பழகுநர்களை நியமனம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக திருச்சி மாவட்டத்தில் தொழில் பழகுநர்கள் சேர்க்கை முகாம் வரும்  13ம் தேதி திருச்சி அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது.

இந்த சேர்க்கை முகாமில் இதுவரை தொழில் பழகுனர் பயிற்சி பெறாதவர்கள் மற்றும் 2018-19 ,2019-20 ,2020-21, 2021-22 வருடங்களில் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் தனியார் ஐடிஐ பயிற்சியாளர்கள், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் 9 ,10 ஆகிய வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற அல்லது தோல்வியடைந்த இளைஞர்கள் ஆண் பெண் இருபாலரும் இப்ப பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிற்பழகுநர்கள் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பயிற்சியின் போது உதவித்தொகை மாதம் ரூ.7000/-முதல் ரூ.10000/-வரை நிறுவனத்தால் வழங்கப்படும். தொழிற்பழகுநர் சட்டம் 1961ன் படி இந்த நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். எனவே மாணவர்கள் இந்த சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளளப்படுகிறது.

மேலும் இது தொடர்பான விவரங்களை அறிய திருவெறும்பூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2553314 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *