ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனவரி 31-ந் தேதி முதல் வேட்புமனுக்கல் தாக்கல் செய்து வருகிறார்கள். திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 3ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக வேட்பாளர்தென்னரசு இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இவர்கள் தவிர தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களும், ஏராளமான சுயேச்சைகளம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று கடைசி நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய சுயேச்சைகள் பலர் வந்தனர். வேட்புமனு தாக்கல் பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. 3 மணிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வேட்புமனுக்கள் பெறப்பட்டது. 75 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். 10-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பபெறலாம், அன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.