Skip to content
Home » கொத்தடிமை ஒழிப்பு தொடர்பான பயிற்சி…. கரூரில் கலெக்டர் துவங்கி வைத்தார்..

கொத்தடிமை ஒழிப்பு தொடர்பான பயிற்சி…. கரூரில் கலெக்டர் துவங்கி வைத்தார்..

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மெஷின் (சர்வதேச நீதி பணி)அமைப்பு சார்பாக கொத்தடிமை ஒழிப்பு தொடர்பான பயிற்சியினை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர்  துவங்கி வைத்து கருத்துரை வழங்கினார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் கூறும்போது…. கொத்தடிமை முறை நடைபெறுவதை பார்த்து பொதுமக்கள் வருத்தப்படுவதும் அது சம்பந்தமாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிடுவதும் போல் அலுவலர்கள் இருக்கக் கூடாது. ஒடுக்கப்பட்டவர்கள் மீட்கப்பட வேண்டும் ஒடுக்கப்பட்டவர்கள் உரிய மறுவாழ்வு பெற வேண்டும் அதற்காக நமது அரசியல் அமைப்பு சட்டம் அரசு அலுவலர்களுக்கு உரிய அதிகாரத்தை வழங்கி உள்ளது. அதற்கான பயிற்சி தான் இன்று உங்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் துறை சார்ந்த அலுவலர்கள், சட்டத்துறை மற்றும் காவல் துறை அலுவலர்கள் உங்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளார்கள். சட்ட நுணுக்கங்களையும் சட்டத்தைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொண்டும் கொத்தடிமை முறைகளை ஒழிப்பதற்காக அலுவலர்கள் முனைப்புடன்

செயல்பட வேண்டும். கொத்தடிமை ஒழிப்பு தினம் நெருங்கி வரும் இந்த வேலையில் அதையொட்டி இந்த பயிற்சி உங்களுக்கு அளிப்பது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாகும். அதனால் இந்த பயிற்சியை அனைவரும் கவனமாக எடுத்துக் கொண்டு அதன் மூலம் களத்தில் இறங்கி மனிதனை மனிதன் சுரண்டாத கொத்தடிமை தனம் இல்லாத கரூர் மாவட்டத்தை உருவாக்க அனைவரும் சேர்ந்து உறுதியேற்று இந்த பயிற்சியை எடுத்துக் கொள்வோம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.

முன்னதாக மாவட்டகலெக்டர் தலைமையில் அனைத்து அலுவலர்களும் கொத்தடிமை ஒழிப்பு தின உறுதி மொழியினை எடுத்துக் கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ், தனித்துணை ஆட்சியர் (சபாதி) சைபுதீன், கோட்டாட்சியர்கள் ரூபினா(கரூர்), புஷ்பாதேவி(குளித்தலை). சர்வதேச நீதி பணி) அமைப்பின் அரசாங்கம் உறவுகள்  தலைவர் கிளாடிஸ் ஃபின்னி, அமைப்பினர் ஜபார்ப்ரின்ஸ், இசக்கியம் சுடலை, சந்தீப், அட்வகேட் ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!