Skip to content

நாட்றம்பள்ளி அருகே போலீஸ் ஸ்டேசனில் காதல் ஜோடி தஞ்சம்….

திருப்பத்தூர் மாவட்டம் பச்சூர் அருகே நல்லகிந்தனபள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி இவரின் மகள் சாரதி ( 19) என்பவரும் பச்சூர் அருகே மலரிப்பட்டி பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகள் பிரியதர்ஷினி (19) ஆகிய இருவரும் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை வீட்டை விட்டு வெளியேறி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் உள்ள குண்டி மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து இன்று நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். அதன்பின் இருதரப்பு பெற்றோகளை வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது பிரியதர்ஷினி தன்னுடைய காதல் கணவன் சாரதியுடன் செல்வதாக கூறியதின் பேரில் காதல் கணவன் சாரதியுடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது.

error: Content is protected !!