Skip to content

திருப்பத்தூர் மாவட்டத்தில் அனல் காற்று வீசுவதால்…. பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் கடும் அவதி..

திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் 100% அதிகமாக சூரிய வெப்பநிலை சுட்டெரிக்கிறது * *அனல் காற்று வீசுவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதி

10 மாவட்டத்திற்கு மேலாக சதத்தை தொடும் அளவிற்கு வெயிலின் தாக்கம் சுட்டெரித்து வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 100% க்கு மேலாக வெயிலின் தாக்கம் பொதுமக்களை சுட்டேரிக்கிறது. மேலும் பொதுமக்கள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் இளநீர், நுங்கு, பதநீர், தர்பூசனை, வாழைத்தண்டு ஜூஸ், நெல்லிக்காய்ஜூஸ், மோர், தயிர், மற்றும் குளிர்பான கடைகளில்

அதிகமான பொதுமக்கள் ஜூஸ் வகைகளை வாங்கிப் பருகுகிறார்கள். பின்பு பொதுமக்கள் மதியம் 1மணிக்கு மேல் சூரிய வெப்பம் அதிகரிப்பதால் வெளியே வருவதற்கு சிரமப்பட்டு குடை பிடித்தும், பெண்கள் தன் துப்பட்டாவால் முகத்தை மறைத்தும் வாகனத்தை இயக்கி வருகிறார்கள்.

மேலும் அதிகப்படியான குளிர்பானங்களை பொதுமக்கள் வாங்கி வருகுவதால் குளிர்பான கடை வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள் . இன்று கடும் வெயிலின் காரணமாக சாலைகளில் அணல் காற்று வீசுகிறது இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!