Skip to content

தி.மலை கோவிலில் விடிய விடிய கணவருடன் கிரிவலம் சென்ற நடிகை சினேகா

பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை கோவிலில் நடிகை சினேகா- பிரசன்னா தம்பதி விடிய விடிய கிரிவலம் சென்றனர்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளில் ஒருவர்களான சினேகா பிரசன்னா தம்பதி.  விஜய், சூர்யா, விக்ரம், கமல்ஹாசன், சிம்பு, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயாகியாக வலம் வந்த சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம்

செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சினேகா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தை ஒட்டி, நேற்றிரவு தனது கணவருடன் கிரிவலம் மேற்கொண்டார். எளிமையாக பக்தர்களுடன் கிரிவலம் மேற்கொண்டு தேங்காய் உடைத்து வழிபாடு செய்தார். அதன் பின் சாமி தரிசனம் செய்தார். கிரிவலப்பாதையில் நடிகை சினேகாவைக் கண்ட ரசிகர்கள் இவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

error: Content is protected !!