கரூரில் கோடைகாலங்களில் கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் அயராது பாடுபடும் போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ், குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் அதிகமாக காணப்படுகிறது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.இதை கருத்தில்
கொண்டு கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ், குளிர்பானம், நீர் மோர் மற்றும் குளிர்பானங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கரூர் சரக துணை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், ஆய்வாளர் சாஹிரா பானு உள்ளிட்ட காவலர்கள் கலந்துகொண்டனர்.