Skip to content

கோடைகாலத்தில் சீரான மின்விநியோகம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்….

  • by Authour

தமிழ்நாடு மின்சார வாரியம் எதிர்வரும் கோடைகாலத்தில் தமிழ்நாடு முழுவதும் சீரான மீன் விதியோகம் வழங்குதல் தொடர்பாக அனைத்து மன்டம நலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது.  தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதற்கு தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. உடன் தமிழ்நாடு மின்வாரிய நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநர் மரு. அனீஷ் சேகர், , தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநர் மரு. ஆல்பி ஜான் வர்கீஸ்,   இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) திரு. விஷு மஹாஜன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

error: Content is protected !!