கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட சட்ட பணி ஆணைக்குழு, பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர் மாவட்ட காவல்துறை இணைந்து தொழிலாளர்கள் மத்தியில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் கூட்டரங்கில் இன்று கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதி பல்கீஸ் பங்கேற்று தலைமை தாங்கி கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார். முன்னதாக இந்நிகழ்விற்கு மாவட்ட சட்ட பணி
ஆணைக்குழுவின் செயலாளர் அண்ணாமலை வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி வாசிக்கப்பட்டது உறுதிமொழியினை பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கர் வாசித்தார். கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரங்களை மாவட்ட முதன்மை நீதி பல்கீஸ் தொழிலாளர் மற்றும் பொதுமக்களிடம் வழங்கினார்.இறுதியாக மாவட்ட சட்ட பணி ஆணைக்குழுவின் மூத்த உதவியாளர் கலைவாணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் சட்டபணிக்குழு நிர்வாகிகள் உறுப்பினர்கள், காவல்துறையினர், தொழிலாளர்கள் , கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.