Skip to content

தஞ்சை அருகே 8 வயது சிறுமியிடம் சில்மிஷம்… முதியவர் போக்சோவில் கைது…

தஞ்சை அருகே வல்லம் காவல் சரகத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அஸ்லம் தான்(வயது 70). சம்பவதன்று அஸ்லம் கான் தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயதான பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து அச்சிறுமி அவருடைய பெற்றோரிடத்தில் கூறி உள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து போலீஸார் விசாரித்ததில், முதியவர் அஸ்லம் கான் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி ஆனது. இதையடுத்து வல்லம் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அஸ்லம் கானை கைது செய்து நேற்று இரவு புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!