அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.
அதிமுகவில் இருந்து 1970-ல் நெல்லை மாவட்டம் ஆலங்குளம், 1980-ல் நெல்லை பாளையம்கோட்டை ஆகிய தொகுதிகளில் இருந்து எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டவர் கருப்பசாமி பாண்டியன். அதிமுகவில் இருந்து விலகி திமுக-வில் இணைந்து 2000-ல் தென்காசி தொகுதி திமுக எம்எல்ஏவாகவும் வெற்றி பெற்றிருந்தார்.
பின்னர் கடந்த 2020-ல் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார். அதிமுக மாவட்ட கட்சி பொறுப்புகளில் முக்கிய அங்கம் வகித்து வந்த கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக நெல்லையில் இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு அதிமுக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.